’வாரிசு நடிகை’ எனத் தொடர்ந்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த ஆலியா பட், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி ஹை வே, உட்தா பஞ்சாப், ராசி, கல்லி பாய் உள்ளிட்ட படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடித்துள்ள ’கங்குபாய் கத்தியாவாடி’ படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. தற்போது தனது சொந்த தயாரிப்பில் உருவாகிவரும் ’டார்லிங்ஸ்’படப்பிடிப்பில் ஆலியா கலந்து கொண்டுவருகிறார்.
இந்நிலையில், வரும் ஆண்டுகளில் ஆலியா பட் ஹாலிவுட்டில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ’வில்லியம் மோரிஸ் எண்டீவர்’ எனும் பிரபல உலக நிறுவனத்துடன் ஆலியா உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.