தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா - ரன்பீருக்கு டிசம்பரில் திருமணம்? - டிசம்பரில் ஆலியா பட் ரன்பீர் கபூர் திருமணம்

மும்பை: 'பிரம்மாஸ்த்ரா' ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்கு இடையே, ஆலியா - ரன்பீர் ஆகியோரின் திருமணம் குறித்த சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த நட்சத்திர ஜோடி வரும் டிசம்பரில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.

Alia Bhatt and Ranbir Kapoor marriage
Alia Bhatt and Ranbir Kapoor

By

Published : Feb 8, 2020, 1:30 PM IST

ஆலியா பட் - ரன்பீர் கபூர் இடையேயான காதல் குறித்து உலா வரும் தகவல்களுக்கு இதுவரை இருவரும் வாய்திறக்காத நிலையில், அதுபற்றி புதிய அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நாளிதழில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக அழைக்கப்படும் ஆலியா பட் - ரன்பீர் கபூர் வரும் டிசம்பர் மாதம் தங்களது திருமணம் தேதியை முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் கூறப்படும் அந்த நாளிதழ் செய்தியில், ஆலியா பட் - ரன்பீர் ஜோடி தற்போது நடித்து வரும் பிரம்மாஸ்த்ரா படம் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதமே இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் அயன் முகர்ஜியின் சூப்பர்ஹீரோ படமான பிரம்மாஸ்த்ரா படத்தில் முதல் முறையாக ஆலியா பட் - ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கின்றனர். பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கியத்துவம் வாய்ந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மெளனி ராய், டிம்பிள் கபாடியா, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.

இந்தப் படத்தின் ரிஸீஸ் குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ள நிலையில், பாலிவுட் சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இதையடுத்து தற்போது ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் குறித்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

ஆலியாவின் தாயும், நடிகையுமான சோன் ரஸ்டானிடம் இதுபற்றி கேட்டபோது, அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கூறியுள்ளார். இதனிடையே இந்த நட்சத்திர ஜோடிகளின் திருமணம் குறித்து பலமுறை தகவல்கள் வெளியானபோதிலும் இம்முறை கண்டிப்பாக நடக்கும் என ரசிகர்கள் பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு ஆதராமாக, சமீபத்தில் நடைபெற்ற ரன்பீர் கபூர் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆலியா பட் சென்றதும், ரன்பீர் தந்தையும், பழம்பெரும் நடிகருமான ரிஷி கபூர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்தபோது தன் குடும்பத்தினருடன் டெல்லிக்கு சென்ற ஆலியா, அவரை பார்த்து விட்டு சம்பவத்தையும் குறிப்பிடுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க டிசம்பரில் நட்சத்திர ஜோடிக்கு திருமண செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருவதுடன், விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details