தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியில் ரீமேக் ஆகும் யு-டர்ன்! - நடிகை அலையா

சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'யு-டர்ன்' இந்தி ரீமேக்கில் வெளியாகவுள்ளது.

யு-டர்ன்
யு-டர்ன்

By

Published : Jul 5, 2021, 4:12 PM IST

கன்னடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில், பவன்குமார் இயக்கியப் படம் 'யு-டர்ன்'.

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து கட்டுரை எழுத விரும்பும் பயிற்சி பத்திரிகையாளர், மேம்பாலத்தில் நடுவில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை அகற்றி அந்த இடத்திலேயே 'யு-டர்ன்' போட்டு செல்பவர்கள் குறித்து, அந்த பத்திரிகையாளர் கட்டுரை எழுத முயற்சி செய்கிறார்.

ஆனால் தடுப்புகளை அகற்றி 'யு-டர்ன்' அடிப்பவர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறக்கின்றனர்.

இந்த இறப்புக்கு பின்னால் இருக்கும் பின்னணியே 'யு-டர்ன்' படத்தின் மீதி கதை. இதன் திரைக்கதை ரசிகர்களை 'த்ரில்லர்' ஜானரில் பயணிக்க வைத்தது.

கன்னடத்தில் இந்தப் படம் வெற்றிப் பெற்றதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு தமிழிலும் தெலுங்கிலும் சமந்தா, ஆரி, பூமிகா ஆகியோரை வைத்து பவன்குமார் இயக்கினார்.

தற்போது 'யு-டர்ன்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை பூஜா பேடியின் மகள் அலையா நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஆரிஃப் கான் இயக்கவுள்ளார். விரைவில் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற கதாபாத்திரங்கள், படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'நாட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர் தபு ' - சைஃப் அலி கான் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details