நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம். திவாரியின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பெல்பாட்டம்’. இதில் அக்ஷய் குமாருடன் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
பாலிவுட்டில் எதிர்பார்ப்பில் இருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான 'பெல்பாட்டம்' 1980-களில் நடக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிவருகிறது.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பை முதலில் தொடங்கியது 'பெல்பாட்டம்' திரைப்படக் குழுதான். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.