விரைவில் வெளிவரயிருக்கும் ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் ப்ரொமோஷனுக்காக, மும்பை முதல் டெல்லிவரை சிறப்பு ரயிலில் வந்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கோட்டா ரயில் நிலையத்தில் வெளியே வந்து அவரது ரசிகர்களை சந்திக்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்திய ரயில்வேத்துறையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ப்ரொமோஷன் ஆன் வீல்ஸ் வசதியின் கீழ் முதல் ஆளாக அனுமதி பெற்று, தனது படத்தின் ப்ரொமோஷன் பணிகளை ரயில் மூலம் துவங்கியுள்ள அக்ஷய் குமாருடன், ஹவுஸ்ஃபுல் 4 படக்குழுவினரான க்ரிதி சேனன், பூஜா ஹெக்டே, ரித்தேஷ் தேஷ்முக், க்ரிதி கர்பண்டா, பாபி தியோல் ஆகியோரும் உடன் இருந்தனர். ஹவுஸ்ஃபுல் 4 எனப் பெயரிடப்பட்டு மும்பையிலிருந்து புதன்கிழமை மதியம் புறப்பட்ட இந்த ரயில், இன்று அதிகாலை கோட்டா ரயில் நிலையத்தை வந்தடைந்தது.