மும்பை:அக்ஷய் குமார் நடிப்பில் உமேஷ் சுக்லா இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியானப்படம் ஓ மை காட். இதில் அக்ஷய் குமாருடன் பரேஷ் ராவல், ஓம் பூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஓ மை காட் படத்தில், நகரில் பழங்கால பொருள்கள், சிலைகளை வைத்து விற்பனை செய்து வரும் பரேஷுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாத்திகவாதியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில் நகரில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதில் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மறுநாள் பரேஷ் வழக்கம் போல் தன் கடைக்கு வருகிறார். அப்போது அவரது கடை மட்டும் நிலநடுக்கத்தில் முற்றிலும் சேதமடைந்தது. அவருக்கு அருகில் இருந்த கடைகள், கட்டிடங்கள் எதுவும் சேதமடையவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் கடவுளை நம்பாததால் இந்த நஷ்டம் ஏற்பட்டதாக பரேஷை குற்றச்சாட்ட தொடங்கினர்.
இந்நிலையில், பரேஷ் கடைக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்தை தொடர்புகொள்கிறார். ஆனால் அவர்களே இது போன்ற நிலநடுக்கத்திற்கு காப்பீடு வழங்க முடியாது என கூறுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பரேஷ் கடவுள், காப்பீடு நிறுவனம் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறார்.