தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மிஷன் மங்கள்' இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்த அக்‌ஷய் குமார்! - மிஷன் மங்கள் இயக்குநர்

மும்பை: 'ராம் சேது' படத்தை தொடர்ந்து அக்‌ஷய் குமார் 'மிஷன் மங்கள்' இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Akshay
Akshay

By

Published : Dec 7, 2020, 3:55 PM IST

ஜெகன் சக்தி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'மிஷன் மங்கள்'.

இதில் டாப்சி, நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று வெளியான இத்திரைப்படம் ரூ. 200 கோடி வசூலை தாண்டியது.

இந்நிலையில், ஜெகன் சக்தி இயக்கவுள்ள அறிவியல் புனைகதை (Sci-Fi) படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அக்‌ஷய் குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் விஎஃப்எக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்‌ஷய் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பது இது முதல் முறை இல்லை. இவர் ஏற்கனவே 'ஜெய் கிஷன்', 'கிலாடி 420', 'அஃப்லடூன்', 'ரவுடி ரத்தோர்' போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தற்போது ஸ்பை த்ரில்லரான 'பெல் பாட்டம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து ஆனந்த் எல். ராய் இயக்கும் 'அட்ராங்கி ரே' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் 'ராம் சேது' படத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை அயோத்தியில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படங்களை முடித்து கொடுத்து இறுதியாக ஜெகன் சக்தி இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பில் அக்‌ஷய் குமார் கலந்து கொள்ள இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details