தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சூர்யவன்ஷி'  படப்பிடிப்புக்கிடையே படப்பிடிப்புத் தளத்தை சுத்தம் செய்த கத்ரீனா - கத்ரீனா குறும்பு விடியோ

'சூர்யவன்ஷி' படத்தின் படப்பிடிப்புக்கு இடையே படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை காணொலியாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார்

Katrina Kaif and Akshay kumar in  Sooryavanshi sets
Katrina Kaif cleaning in Sooryavanshi sets

By

Published : Feb 4, 2020, 9:18 AM IST

மும்பை: சுடிதார் அணிந்தவாறு 'சூர்யவன்ஷி' படப்பிடிப்புக்கு இடையே, படப்பிடிப்புத் தளத்தை கத்ரீனா கைஃப் விளக்குமாறு வைத்து சுத்தம் செய்யும் காணொலியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

இந்தக் காணொலியில், 'சூர்யவன்ஷி படப்பிடிப்புத் தளத்தில், தூய்மை பாரதம் திட்டத்திற்கான புதிய தூதர் காணப்பட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார் அக்‌ஷய் குமார்.

மிகவும் சிம்பிளான எம்ராய்டரி டிசைனுடன் வடிவமைக்கப்பட்ட சுடிதார் அணிந்தவாறு, கையில் விளக்குமாறு வைத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்தை சுத்தம்செய்து கொண்டிருந்தவரிடம், 'என்ன செய்கிறீர்கள்?' என்று அக்‌ஷய் கேட்க, 'சுத்தம் செய்கிறேன்' என்று பதில் அளித்த கத்ரீனா, பின் கொஞ்சம் நகருங்கள் என்று தனது கையிலிருந்த விளக்குமாறால் அவரை விரட்டுகிறார்.

பாலிவுட் மாஸ் படங்களின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கிவரும் 'சூர்யவன்ஷி' படத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாகவும், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார்கள். கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடிக்கிறார்.

போலீஸ் கதை பின்னணியில் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிவரும் இப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தமிழில் சூப்பர் ஹிட்டான 'காஞ்சனா' படத்தின் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்காக உருவாகிவரும் 'லக்‌ஷ்மி பாம்' என்ற படத்திலும் நடித்துவருகிறார் அக்‌ஷய் குமார்.

ABOUT THE AUTHOR

...view details