தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்ஷய் குமாரின் 'ரக்ஷா பந்தன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - ரக்ஷாபந்தன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'ரக்ஷா பந்தன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அக்ஷய குமார்
அக்ஷய குமார்

By

Published : Aug 3, 2020, 5:30 PM IST

நடிகர் தனுஷ் 'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் 'அத்ராங்கி ரே'. இந்தப்படத்தில் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் ஆனந்த். எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், இதன் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களும் வெளியாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அக்ஷய்குமார், சாரா அலிகான் காட்சிகளைப் பிகாரிலும்; தனுஷ் சாரா அலிகான் காட்சிகளை மதுரையிலும் எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதற்கிடையில் இயக்குநர் ஆனந்த் எல். ராய் அக்ஷய் குமாரை வைத்து 'ரக்ஷா பந்தன்' என்னும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய் குமார் இன்று(ஆகஸ்ட் 3) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 2021ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details