தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'லக்ஷ்மி பாம்'ஆக வெடிக்கும் இந்தி 'காஞ்சனா'வின் ஃபர்ஸ்ட் லுக் - ராகவா லாரண்ஸ்

காஞ்சனா 1, 2, 3 என அடுத்தடுத்து திகில் ஜூரம் அளித்த காஞ்சனா சீரிஸ் படத்தின் முதல் பாகம் பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில், அதில் நடித்து வரும் அக்ஷய் குமார் தனது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

லக்ஷ்மி பாம் படத்தில் அக்ஷய்குமார் லுக்

By

Published : Oct 3, 2019, 1:09 PM IST

மும்பை: காஞ்சனா ரீமேக்காக உருவாகி வரும் லட்சுமி பாம் படத்தில் தனது கேரக்டரின் லுக்கை நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

2011இல் வெளியான திகில் கலந்த காமெடிப் படமான காஞ்சனா, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தை நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரமாக திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்திருப்பார்.

இதையடுத்து காஞ்சனா 2, 3 என அடுத்தடுத்து காஞ்சனா சீரிஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், காஞ்சனா முதல் பாகம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படத்தை அக்ஷய்குமார் தனது ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், நவராத்திரி என்றாலே கடவுளை தலைவணங்கி, நமக்குள் இருக்கும் எல்லையில்லா வலிமையை கொண்டாடும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நல்ல நாளில் லக்ஷ்மி பாம் படத்தில் எனது லுக்கை பகிர்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பதற்கு ஆர்வமும், பதட்டமும் ஒரு சேர உள்ளது #LaxmmiBomb என்று குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மி பாம் படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். 2020 மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details