தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடற்பயிற்சி செய்ய ஜிம் தேவையில்லை - 'பெல்பாட்டம்' அக்‌ஷய் குமார் - கடற்கரையில் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடிய அக்‌ஷய் குமார்

நடிகர் அக்‌ஷய் குமார் கடற்கரையில் இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடும் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Akshay Kumar
Akshay Kumar

By

Published : Jan 30, 2020, 4:45 PM IST

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் அக்‌ஷய் குமார் சினிமாவில் பிஸியாக நடித்துவந்தாலும் உடற்பயிற்சி செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில் காலை நேரத்தில் கடற்கரையில் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து அக்‌ஷய் குமார் கைப்பந்து விளையாடியுள்ளார். இந்தக் காணொலியுடன், காலையில் கடற்கரையில் இந்த இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடினேன். உடற்பயிற்சி செய்ய ஜிம் தேவையில்லை. அதை விடுங்கள்... இது வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இந்தக் காணொலியானது தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களாலும் இணையவாசிகளாலும் லைக் செய்யப்பட்டு அதிகமாகப் பகிரப்பட்டும் வருகின்றது.

அக்‌ஷய் குமார் தற்போது 'லட்சுமி பாம்', 'பச்சன் பாண்டே', 'பிருத்விராஜ்', 'பெல்பாட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இதற்கு மத்தியில் நேற்று 'Man vs wild' நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இதையும் வாசிங்க: டாக்டர் வசீகரனை தொடர்ந்து பந்திப்பூருக்கு சென்ற பக்ஷி ராஜன்

ABOUT THE AUTHOR

...view details