தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்ஷய் குமாரின் புதுப்பட போஸ்டர் வெளியீடு! - poster released

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் 'பச்சன் பாண்டே' என்னும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

AKSHAY KUMAR

By

Published : Jul 26, 2019, 2:15 PM IST

Updated : Jul 26, 2019, 2:46 PM IST

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அக்ஷய் குமார். விதவிதமான தோற்றத்தில் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார் அவர். அவரது நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 'மிஷன் மங்கள்' படம் திரைக்கு வரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'ஹவுஸ் ஃபுல் 4', 'சூர்யவன்ஷி', 'லஷ்மி பாம்', 'குட் நியூஸ்' ஆகிய படங்கள் அக்ஷய் நடிப்பில் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், 'பச்சன் பாண்டே' என்னும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் தோன்றுகிறார். இப்படம் 2020ஆம் ஆண்டு கிறிஸ்துமசிற்கு வெளியாகும் என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சன் பாண்டே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஹத் சம்ஜி இயக்கத்தில், சஜித் நதியத்வாலா தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. மேலும், இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Jul 26, 2019, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details