இந்திய அளவில் முதன் முறையாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் படமாக 'மிஷன் மங்கள்' திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெகன் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், வித்யா பாலன், நித்யா மேனன், டாப்ஸி, சோனாக்சி சின்ஹா, கிரிதி குல்காரி, சர்மான் ஜோஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்திய விஞ்ஞானிகளின் கனவை நிஜமாக்கும் படமாக உருவாகியுள்ள 'மிஷன் மங்கள்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பெண்களை முன்னிறுத்தும் அக்ஷய் குமார் - 'மிஷன் மங்கள்' டிரெய்லர் ரிலீஸ் - அக்சய் குமார்
இயக்குநர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள 'மிஷன் மங்கள்' படத்தின் டிரெய்லர் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. 2 நிமிடம் 52 நொடிகள் இடம்பெறும் இந்த டிரெய்லரில் எதார்த்தமான காட்சிகள், அறக்க பறக்க ஓடி திரியும் நான்கு பெண்கள் என பதற்றத்தை ஏற்படுத்துகிறது. நாம் முயற்சி செய்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கைதான் படத்தின் உயிரோட்டம். 'கேப்டன் ஆப் சிப்' ஆக அக்ஷய் குமார் வருகிறார். பயிற்சி இல்லாத இளம் அணி செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வென்றதா இல்லையா என்பதை ஒரு அழகியலோடு சொல்கிறார் என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செயற்கை கோளை அனுப்ப வேண்டும் என்பது மையக் கதையாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரமிக்க வைக்கும் காட்சிகள் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.