கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேசிய நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி வழங்கினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நம் மக்களின் வாழ்க்கைக்கானது. இந்நேரத்தில் நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்யவேண்டும். இந்நேரத்தில் எனது சேமிப்பிலிருந்து ரூ.25 கோடியை பிரதமர் மோடியின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். உயிர்களை காப்போம்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
கரோனா பாதிப்பு: தேசிய நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அக்ஷய் குமார்! - கரோனாவுக்கு நிதியுதவி அளிக்கும் பிரபலங்கள்
கரோனா (கோவிட்19) வைரஸ் தொற்றுநோய் பாதிப்பை சமாளிக்கும் வகையில் தேசிய நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Akshay kumar
நடிகர் அக்ஷய்குமாரின் இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். கரோனா தொற்றுக்கு இந்தியாவில் 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Last Updated : Mar 28, 2020, 8:16 PM IST