தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தோனியை சந்தித்த அஜய் தேவ்கன்: கிரிக்கெட்-சினிமா இந்தியாவை இணைக்கும் சக்தி - அஜய் தேவ்கான் நடிக்கும் தனாஜி படம்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நட்பு பாராட்டினார்.

Ajay meets Dhoni
Ajay meets Dhoni

By

Published : Jan 9, 2020, 3:23 PM IST

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் 'தனாஜி தி அன்சங் வாரியர்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அஜய் தேவ்கன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து நட்பு பாராட்டினார்.

இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள நடிகர் அஜய் தேவ்கன் கூடவே, 'கிரிக்கெட், திரைப்படங்கள் நம் நாட்டின் ஒரே மதம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை தோனி, அஜய் தேவ்கன் ரசிகர்கள் விரும்பியுள்ளதோடு, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...

இயக்குநர் அவதாரமெடுக்கும் எஸ்.பி.பி. சரண்

ABOUT THE AUTHOR

...view details