தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைப்படமாக உருவெடுக்கும் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் - அஜய் தேவ்கன்

கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினர் இந்திய வீரர்கள் மீது நடத்திய தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு நடிகர் அஜய் தேவ்கன் படமொன்றை தயாரிக்க உள்ளார்.

அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கன்

By

Published : Jul 4, 2020, 7:36 PM IST

Updated : Jul 4, 2020, 9:53 PM IST

சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதியன்று இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் இந்தியத் தரப்பில் உயர் அலுவலர் உள்ளிட்ட 20 ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர்.

இதுவரை ஒரு சில அலுவலர்கள் மட்டுமே இறந்ததாக சீன அரசு சொல்லி வந்தாலும், அங்கு 43 பேர் உயிரிழந்திருக்கலாம் என சீனத் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. இதனையடுத்து, லடாக்கில் உள்ள இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நீடித்துவருகிறது.

தற்போது இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அஜய் தேவ்கன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார என்பது தெரியவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அஜய் தேவ்கனின் எஃப்ஃபிலிம்ஸ் - செலக்ட் மீடியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'Bhuj: The Pride of India' திரைப்படம் விரைவில் டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, அம்மி விர்க், ஷரத் கெல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் துதையா எழுதி இயக்கியுள்ளார்.

Last Updated : Jul 4, 2020, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details