இந்தியில் 'தபாங்', 'சிங் இஸ் கிங்', 'சிம்பா', தமிழில் 'சந்திரமுகி’, 'அருந்ததி', 'ஒஸ்தி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் மத்தியில், மும்பையில் வேலை செய்துவந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் பலர், வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வந்த நிலையில், இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.
"குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தினருடன் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்து, நான் ஏசி அறையில் அமர்ந்து ட்வீட் செய்ய முடியாது. இவர்களுக்கு உதவுவதுதான் எனது முக்கிய கடமை” என்று இதுகுறித்து அவர் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்தார்.