தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தனாஜி: தி அன்சங் வாரியர்' - 2ஆவது ட்ரெய்லர் வெளியீடு - தனாஜி மாலுசாரேயின் வாழ்க்கை வரலாறு

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானின் 'தனாஜி: தி அன்சங் வாரியர்' திரைப்படத்தின் 2ஆவது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tanhaji
Tanhaji

By

Published : Dec 17, 2019, 7:46 AM IST

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், சைஃப் அலி கான், கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் படம் 'தனாஜி'.

தனாஜி: தி அன்சங் வாரியர்

மராட்டியப் பேரரசில் ராணுவ தலைமைப் பொறுப்பு வகித்த தனாஜி மாலுசாரேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தை பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையில் இணைந்து அவருடன் பல போர்களில் ஈடுபட்ட தனாஜியின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

ஷரத் கெல்கர், ஜெகபதிபாபு, தேவ்தத்தா நாகே, லூக் கென்னி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 2ஆவது ட்ரெய்லரை நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

இந்த வேடத்தில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறார் ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details