முன்னாள் உலக அழகியும், இந்தியாவின் என்றைக்குமான கனவுக்கன்னிகளில் ஒருவருமாகத் திகழ்பவர், நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துகொண்டு, தன் திருமண வாழ்வில் பிசியாகிவிட்ட ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யாவுடன் வெளி இடங்களுக்கு வரும் புகைப்படங்கள் இன்றும் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது தன் தாய் பிருந்தா ராயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.