இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய சினிமாக்கள் பற்றி பேசுகையில், அமிதாப்பச்சன் நடித்த 'ஷோலே' மற்றும் ஷாருக்கான்-கஜோல் நடித்த 'தில்வாலே துல்கனியா லே ஜாயிங்கே' ஆகிய படங்களைக் குறிப்பிட்டு பேசினார்.
இது குறித்து ஷாருக்கானின் மனைவி கௌரி கூறுகையில், “தில்வாலே துல்கனியா லே ஜாயிங்கே' படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கான் எடுக்க வேண்டும். அநேகமாக அவரது அடுத்த திட்டம் அதுவாகத்தான் இருக்கும்.
இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிடம் பேசவுள்ளேன். அவருக்கு என்னை பிடித்ததை விட நான் செய்த கட்டிட வடிவமைப்பு வேலையை மிகவும் நேசித்தார். புதிது புதிதான வடிவமைப்புகள் மீது மிகுந்து ஆர்வம் கொண்ட அவர் நடிகராகவிட்டால், கட்டாயமாக கட்டிட வடிவமைப்பாளராகியிருப்பார்.