பலிவுட்டின் முன்னணி இயக்குநர் - தயாரிப்பாளர் சஞ்சாய் லீலா தற்போது 'கங்குபாய் கதியாவாதி' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
ஜூலை 30ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 9) சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் கங்குபாய் கதியாவாதி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படக்குழுவினருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இன்று ரன்பீர் கபூருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரன்பீருடன் பிரம்மாஸ்திரா, சஞ்சய் லீலா பன்சாலியின் 'கங்குபாய் கதியாவாதி' படத்திலும் ஆலியா பட் நடித்துவருவதால், அவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுக்காக காத்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.