ஹைதராபாத்: தேசிய விருது பெற்ற நடிகர் விக்கி கௌசலுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து விக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில், மிகக் கவனமாக முன்னச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.