பாலிவுட் நடிகை அடா சர்மா ஷாக்ஸில் முகமூடி தயாரிப்பது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அடா சர்மா. பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவான '1920' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். த்ரில்லர் படமாக உருவான இப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து நடித்த படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்துவந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்தார்.
சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது போட்டோ சூட்டில் எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பும் பதில்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார். தற்போது கரோனா அச்சம் காரணாக தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது.