தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாட்டி ஆனார் கமலின் கதாநாயகி! - ரவீனா டண்டன் மகள்

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் பாட்டியாக புரொமோஷன் பெற்றுள்ள நடிகை ரவீனா டான்டன்.

ஆளவந்தான் படத்தில் ரவீனா டண்டன்

By

Published : Sep 19, 2019, 11:17 AM IST

மும்பை: பாட்டியாக புரொமோஷன் பெற்றுள்ள நடிகை ரவீனா டான்டன் தனது மகளையும் அவரது குழந்தையையும் வீட்டுக்கு பூஜையுடன் வரவேற்றுள்ளார்.

90களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வந்தவர் ரவீனா. தமிழில் அர்ஜுன் ஜோடியாக ’சாது’ படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஜோடியாக ’ஆளவந்தான்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் 'நச் பலியே' என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோ நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

தற்போது 44 வயதாகும் ரவீனா, தனது 21 வயதில் திருமணமாகாமல் சாயா (11), பூஜா (8) என இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்தார். இவர்கள் இருவரும் ரவீனாவின் உறவினர்களின் குழந்தைகள். அவர்களின் பெற்றோர் இறந்தவிட்ட நிலையில், சாயா, பூஜா ஆகியோரை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், சாவன் மெண்டிஸ் என்பவரை காதலித்து சாயா திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமான அவருக்கு, இம்மாத தொடக்கத்தில் சீமந்த விழா நடத்தப்பட்டது. இதன் புகைப்படத்தை அப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரவீனா, விரைவில் பாட்டியாக போகிறேன் என தெரிவித்திருந்தார்.

மகள்களுடன் ரவீனா

இதைத்தொடர்ந்து தற்போது சாயா குழந்தையை பெற்றெடுத்த நிலையில், தாய்-சேய் என இருவரையும் பூஜை செய்து வீட்டுக்கு வரவேற்றுள்ளார் ரவீனா. இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு 'எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. குழந்தை வீடு வந்து சேர்ந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மகளையும், அவரது குழந்தையையும் வரவேற்கும் நிகழ்ச்சி

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் அனில் தந்தானி என்பவரை காதலித்த ரவீனா, 2004இல் அவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தம்பதியருக்கு ராஷா, ரன்பிர் வர்தன் என குழந்தைகள் பிறந்தன. தனது தத்துப் பிள்ளைகள் இருவர், பெற்றெடுத்த பிள்ளைகள் இருவர் என ரவீனாவுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details