தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆடம்பர காருக்கு அம்மா சென்டிமெண்ட் - மயில் மகளின் பாசம்..! - நம்பர் பிளேட்

நடிகை ஜான்வி கபூர் தனது தாய் ஸ்ரீதேவிக்கு பிடித்த விருப்ப எண்ணை அவர் வாங்கியுள்ள ஆடம்பர காருக்கு சூட்டியுள்ளார்.

actress-janhvi-kapoor

By

Published : Oct 23, 2019, 4:40 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் கைகோர்த்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர், கடந்த 2018 பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.

நடிகை ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ’தடக்’ என்ற இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஸ்ரீதேவிக்கு பாலிவுட் சினிமா வட்டாரம் அளித்து வந்த அதே ஆதரவு அவரது மகளுக்கும் கிடைத்துள்ளது. ஜான்வி கபூர் தனது அனைத்து விஷேச நிகழ்வுகளையும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பதால் ஏராளமான ஃபாலோவர்ஸையும் கொண்டிருக்கிறார்.

நடிகை ஜான்வி கபூர் வாங்கியுள்ள புதிய கார்

தற்போது, தனது தாய் ஸ்ரீதேவிக்கு விருப்பமான 7666 என்ற எண்ணை தான் புதிதாக வாங்கியுள்ள ஆடம்பரக் காரின் எண்ணாக பெற்றுள்ளார். ஸ்ரீதேவி பயன்படுத்திவந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸின் 7666 என்ற எண்ணை, ஜான்வி கபூர் தனது புதிய காரான மெர்சிடிஸ் பென்ஸ் மேபாக் எஸ் 560 என்ற காரின் எண்ணாக வாங்கியிருக்கிறார். இந்தக் காரின் விலை ஏறக்குறைய 2 கோடியாகும்.

இதையும் படிங்க...

#BigilEmoji: வெறித்தனம் காட்டும் 'பிகில்' எமோஜி

ABOUT THE AUTHOR

...view details