தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உள்ளம் கேட்குமே, மஜா, போக்கிரி, சிவகாசி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அசின். தமிழ், மலையாளம, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருந்த வேளையில் பாலிவுட் சென்ற அசின், தொழிலதிபர் ராகுல் சர்மாவை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன மூன்றாவது வருடத்தில் ராகுல் சர்மா -அசின் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அழகோ அழகு... பேரழகி அசின் மகள் அரின் - actress asin daughter
நடிகை அசின் மகள் அரின் குட்டி கார் ஓட்டும் அழகான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அசின் மகள் அரின்
அக்குழந்தைக்கு அரின் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், சினிமாவிற்கு முழுக்கு போட்டு குடும்ப பொறுப்பில் மூழ்கியிருக்கும் அசின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், தனது செல்ல மகள் அரினுக்கென்று குட்டி கார் ஒன்றை அசின் பரிசளித்துள்ளார். அந்த காரை வீட்டின் முன்புறத்தில் உள்ள புல்வெளியில் அரின் சுட்டித்தனமாக ஓட்டித் திரியும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.