தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் காதலி அமித் ஷாவுக்கு கோரிக்கை! - சுஷாந்த் சிங்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுஷாந்த்
சுஷாந்த்

By

Published : Jul 16, 2020, 10:01 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம்(ஜூன் 14)தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய சிபிஐ புலன் விசாரணை வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும், சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, "மதிப்பிற்குரிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வணக்கம். நான் சுஷாந்தின் காதலி.

அவர் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. எனக்கு அரசு மீது நம்பிக்கை உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையைத் தொடங்குமாறு இருகரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சுஷாந்தை தற்கொலை முடிவிற்கு தள்ளியது எது என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details