குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மூத்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலை தேசிய நாடகப் பள்ளியின் புதிய தலைவராக நியமித்து இன்று (செப்.10) அறிவித்துள்ளார்.
ஹீரா ஃபெரி, ஓஎம்ஜி, நாயக் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் நடித்துள்ள பரேஷ் ராவல் தற்போது தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு பள்ளியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்மஸ்ரீ பரேஷ் ராவலை தேசிய நாடகப் பள்ளியின் புதிய தலைவராக நியமித்துள்ளார். இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் புதிய உயரங்களை அடைய வழிகாட்டுவதற்காக அவரை பள்ளியின் சார்பில் வரவேற்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக பிரபல நாடகக் கலைஞர் அர்ஜுன் தியோ சரண் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க :மீண்டும் உங்களை மகிழ்விக்க வருகிறார் எல்லன் டிஜெனெரஸ்