மும்பை: பாலிவுட் சூப்பர் ஹிட் படமான ஆஷிக்யூ படத்தின் கதாநாயகன் ராகுல் ராய் மூளை பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் மூளையில் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் 52 வயதாகும் நடிகர் ராகுல் ராய், மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார்.
'கார்கில்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று முடித்த பின்னர் வீடு திரும்பியபோது திடீரென அவருக்கு மூளை பக்காவதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் , முழுமையாக குணமடைய சில நாள்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் மூத்த இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய மியூச்சிக்கல் ரொமான்ஸ் திரைப்படமான ஆஷிக்யூ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராகுல் ராய்.
1990இல் வெளியான இந்தப் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 22 தான். படத்தில் கதாநாயகியாக அனு அகர்வால் நடித்திருந்தார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்தப் படம், அப்போதே கோடிகளில் வசூலை அள்ளியது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'ஆஷிக்யூ 2' என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவது பாகத்தில் ஆதித்யா ராய் கபூர், ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தனர்.
இந்தப் படமும் முதல் பாகத்தை போன்று மியூசிக்கல் ரொமான்ஸ் பாணியில் அமைந்திருந்ததுடன் பாடல்கள், காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
இதையும் படிங்க: ஷார்ட் கவுனுடன் மாலத்தீவுக்கு குட்பை சொன்ன சோனாக்ஷி