தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை - போதைப்பொருள் பயன்படுத்திய ஷாருக்கான் மகன்

போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்பட 8 பேர் பிடிபட்ட நிலையில், போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர், ஆரியன் கானை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவ பரிசோதனை
கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவ பரிசோதனை

By

Published : Oct 3, 2021, 5:46 PM IST

Updated : Oct 3, 2021, 6:31 PM IST

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அருகே நடுக்கடலில் சுற்றுப்பயணம் சென்ற உல்லாச கப்பலில், பயணிகள் போல மாறுவேடத்தில் சென்று, போதை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்பட 8 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக பிடிபட்டனர்.

இந்நிலையில், ஆரியன் கான் மற்றும் மேலும் இருவரை போதைப்பொருள் தடுப்புக் குழுவினர் மருத்துவசோதனைக்கு இன்று (அக். 3) உட்படுத்தினர்.

8 பேரின் பெயர்கள்

ஆரியன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர், கோமித் சோப்ரா என கைதான எட்டு பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்றிரவு (அக். 2) அவர்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 8 பேர் கைது!

Last Updated : Oct 3, 2021, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details