பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் ஜுனைத் மற்றும் இரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதில் இரா இளைய மகள் ஆவார்.
ஆமீர்கானின் மகளுக்கு இந்த இசைக்கலைஞருடன் காதலா..?! - இரா கான்
ஆமீர்கானின் இரண்டாவது மகள் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Boy Friend
இரா கான் பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், தனது பாய் பிரண்ட் என்று சொல்லப்படும் மிசாஹல் கிருபாளனி என்ற இசைக் கலைஞருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது இரா கான் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர்தான் அவருடைய பாய் ஃப்ரண்டா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.