தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மருமகளின் முதல் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த அமிர் கான்! - அமிர்கான் பாலிவுட் நடிகர்

மருமகள் ஸாயன் மரி அறிமுகமாகும் மிஸ்சஸ் சீரியல் கில்லர் என்ற ஹிந்திப் படத்தின் பிரிமியர் ஷோவை பாலிவுட் நடிகர் அமிர் கான் குடும்பத்துடன் வீட்டிலேயே பார்த்து ரசித்தார்.

amir
amir

By

Published : May 3, 2020, 3:03 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர் கானின் மருமகளும், 'குயாமாட் சே கயாம்த் தக்', 'ஜோஷ்', 'அக்லே ஹும் அக்லே தும்' உள்ளிட்ட ஹிந்திப் படங்களின் இயக்குநர் மன்சூர் கானின் மகளுமான ஸாயன் மரி, 'மிஸ்சஸ். சீரியல் கில்லர்' என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்தத் திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை நடிகர் அமிர் கான், வீட்டிலிருந்தபடியே மனைவி கிரண் ராவ், மகள் ஈரா கான் ஆகியோருடன் பார்த்து ரசித்தார்.

ஆனால், இவர்கள் நட்சத்திர விழாவுக்குச் செல்வது போல, ஸ்டைலாக ட்ரெஸ் போட்டுக்கொண்டே படத்தைப் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஈரா கான், "இதோ இப்போது தொடங்குகிறது. ஸாயன் மரி உன்னை மிகவும் நேசிக்கிறேன். உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியடைகிறேன். குவாரன்டினோ, மூன்றாம் உலகப் போரோ, கெட்ட வாரமோ, நல்ல வருஷமோ... உன்னுடன் நாங்கள் எப்போதும் இருப்போம். கஷ்ட, நஷ்டங்களிலும் உன்னுடன் பயணிப்போம்" எனக் கூறி, புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தில், நடிகர் அமிர் கான் கிரே கலரில்; பிளெசரில் ஸ்டைலாக காட்சியளிக்கிறார். மகள் ஈராவோ மஞ்சள் வண்ண சேலையும், சிவப்பு வண்ண பிளவுஸுடன் படுஸ்டைலீஷாக இருக்கிறார்.

ஜாகுலின் பெர்னாண்டஸ் கதாநாயகியாக நடிக்கும் 'மிஸ்சஸ். சீரியல் கில்லர்' படம் மே 1ஆம் தேதி டிஜிட்டல் தளங்களில் வெளியானது.

தொடர் கொலை வழக்கில் கணவர் தவறாகக் கைது செய்யப்படுகிறார். அவரை மீட்கும் மனைவியின் உணர்வுப்பூர்வமான போராட்டமே இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

இதையும் படிங்க : மூவாயிரம் கிமீ தொலைவிலிருந்து காணொலி மூலம் அறுவை சிகிச்சை செய்து நாய்க்குட்டியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details