தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மனநலம் பேணுதல் பயணத்திற்கு அழைப்பு விடுக்கும் ஆமிர்கான் மகள் - மன அழுத்தத்தில் ஐராகான்

மும்பை: ஆமீர் கானின் மகள் ஐராகான் தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறியுள்ளார்.

ஐரா கான்
ஐரா கான்

By

Published : Oct 13, 2020, 12:45 AM IST

உலக மனநல தினம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நடிகர் ஆமீர் கானின் மகள் ஐராகான் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் மனநலம் பேணுதல் குறித்து ஐராகான் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறேன். அதற்காக மருத்துவரை அணுகி நான் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக தேறி உள்ளேன்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக மனநலம் குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் என்ன செய்வதென்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்போது நான் எப்படி தொடங்கினேனோ அப்படியே தொடங்குகிறேன். எதைப்பற்றி மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டும்? மன அழுத்தம் வரும் அளவுக்கு நான் யார்? எனக்கு என்ன எல்லாம் இருக்கிறது?

நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கின்றன. நம்மை குழப்பும் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் பல சூழல்கள் உணர்வுகளை கடந்து வந்திருக்கிறோம். எல்லாவற்றையும் பற்றி இப்போதே பேசி விட முடியாது. ஆனால் நான் சில விஷயங்களை புரிந்து கொண்டுள்ளேன் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அவற்றை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

எனவே என்னுடன் இந்த மனநலம் பேணுவதற்கான வினோதமான நகைச்சுவையான சில நேரங்கள் குழந்தை பேசுவதைப் போன்ற முடிந்தவரை நான் நேர்மையாக இருக்கும் பயணத்தில் என்னோடு வாருங்கள். ஒரு உரையாடலை ஆரம்பிப்போம்" என்று கூறியுள்ளார்.

கிரேக்கத்தில் நடந்த சோகமான நிகழ்வு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு 'யூரிபெடீஸ் மெடியா' என்ற மேடை நாடகத்தை இயக்கியதன் மூலம் ஐராகான் இயக்குநராக அறிமுகமானார்.

ABOUT THE AUTHOR

...view details