காஷ்மீரில் நடக்கும் அரசியல், பயங்கரவாதம், சீர்குலைந்த குடும்பங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஷிகாரா தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் காஷ்மீரி பண்டிட்ஸ்'.
பாலிவுட் இயக்குநர் விது வினோத் சோப்ரா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் இந்தப்படம் 1989இல் காஷ்மீரில் நடந்த இன அழிப்பு, கலவரம், சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளைப் பேசும் படமாக அமைந்துள்ளது.
ஆதில் கான், சதியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாடல்களுக்கு சந்தோஷ் சந்தில்யா, அபய் சோபோரி இசையமைத்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார்.