பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக தொடங்கப்பட்டது #Metoo இயக்கம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மீடூ என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்தனர். இதில் ஹாலிவுட் முதல் இந்திய சினிமா வரை திரைத் துறை பிரபலங்கள் பலரும் சிக்கினர். அந்தவகையில் ஜாலி எல்.எல்.பி., குட்டு ரங்கீலா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுபாஷ் கபூர் மீது நடிகை கீதிகா தியாகி மீடூ குற்றஞ்சாட்டினார்.
இந்தச் சூழலில்தான் அமீர் கான், சுபாஷ் கபூர் இணைந்து பணிபுரியவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. பாலிவுட் பிரபலங்கள் பலரும் மீடூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அமீர் கானும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மீடூவில் சிக்கிய ஒரு இயக்குநருடன் தான் பணிபுரிய மாட்டேன் என அந்த ப்ராஜெக்டிலிருந்து விலகினார். இந்நிலையில், அமீர் கான் மீண்டும் அந்த ப்ராஜெக்டில் பணிபுரியவுள்ளார்.
டி - சீரிஸ் நிறுவனர் குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாற்று கதையை சுபாஷ் கபூர் படமாக்கவுள்ளார். ‘மொகுல்’ என பெயரிடப்பட்ட இந்த படத்தில் அமீர் கான் நடிப்பதுடன் இணை தயாரிப்பு பணியையும் மேற்கொள்கிறார்.