கரோனா சூழலில், டெல்லியில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரு ட்ரக் வந்ததாகவும், அதில் எக்கச்சக்கமான ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளில் 15,000 ரூபாயை வைத்து ஆமிர் கான் மக்களுக்கு உதவியதாகவும் ஒரு டிக்டாக் வீடியோ வெளியானது.
கோதுமை மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் - ஆமிர் கான் விளக்கம்
பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள விளிம்புநிலை மக்களுக்கு உதவும் பொருட்டு அவர் கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் 15,000 ரூபாய் வைத்து அனுப்பியதாக பரவிய செய்திக்கு விளக்கமளித்துள்ளார்.
Aamir Khan puts end to 'distributed money in wheat flour packets' speculations
இதுகுறித்து ஆமிர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், கோதுமை பைகளில் பணத்தை முதலீடு செய்யும் நபர் நான் கிடையாது. அது கட்டுக்கதையாக இருக்கலாம் அல்லது ராபின் ஹூட் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். பத்திரமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்!