ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த 'ஃபர்ஸ்ட் கம்ப்' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கிறார். இந்தியில் இப்படத்திற்கு 'லால்சிங் சாதா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' பட இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்குகிறார். அமீர்கான் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். அதுல் குல்கர்னி திரைக்கதை எழுதியுள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.
'லால்சிங் சாதா' படத்தில் அமீரின் நண்பராக விஜய்சேதுபதி நடிக்கிறார். ஃபர்ஸ்ட் கம்ப் திரைப்படத்தில் வில்லியம்சன் நடித்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க காரணம், 'லால்சிங் சாதா'வில் அமீர்கானின் நண்பனாக நடிக்கும் கதாபாத்திரம் தமிழராக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் சேதுபதியை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அமீர்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் 'லால்சிங் சாதா' படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்காக அமீர்கான் 20 கிலோ எடையை குறைத்துள்ளார். அதில் கிரே கலர் செக்டு சட்டையில் தலைப்பாகை - நீண்ட தாடியுடன் காட்சியளிக்கிறார். இவரின் இந்த தோற்றம் ரசிகர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.