மேற்கு வங்க ரயில் நிலையத்தில் தன் போக்கில் பாட்டு பாடிக்கொண்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து, அன்றாட வாழக்கையை ஓட்டியவர் தான் ரனு மண்டல்.
ஒரு நாள் அவர் ரயில் நிலையத்தில் யாசகத்தின் போது பாடிகொண்டிருக்கையில் ஒருவர் அதனை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்ற இன்று ரனு மண்டல் ஒரு திரையிசைப் பின்னணிப் பாடகி.
Railway singer Ranu Mondal ஆம், இந்த காணொலியைக் கண்ட தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாட வைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்த ஹிமேஷ் ரேஷ்மையா ரனு மண்டலின் குரலில் மெய் சிலிர்த்து போக, அடித்தது ஜாக்பாட்.
இதன் பிறகுதான் தேரி மேரி என்ற பாடலை பாடி இணைய உலகில் கொடிகட்டி பறக்கிறார், ரனு. இந்நிலையில் தான் ரனு மண்டல் பாடிய ஹாப்பி ஹார்டி ஹீர் (HAPPY HARDY HEER) தேரி மேரி பாடல் வெளியாகியுள்ளது. அவர் மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.