மும்பை: செயற்கை கருத்தரித்தல் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, 1988ஆம் ஆண்டு லண்டனில் பிறந்துள்ளேன் என்று சங்கீத் குமார் என்ற இளைஞர் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சங்கீத் குமார் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. இதில், பேசியிருக்கும் அவர், ஐஸ்வர்யா ராய் எனது தாய் எனவும், அவரது தாயார் பிருந்தா ராய், மறைந்த தந்தை கிருஷ்ணராஜ் ராய் ஆகியோர் தன்னை இரண்டு வயது வரை பார்த்துக்கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எனது பிறப்பு குறித்த ஆதாரங்களை உறவினர்கள் அழித்துவிட்டனர். தற்போது தாய் ஐஸ்வர்யா ராயுடன் மீண்டும் இணைந்து வாழ காத்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று சங்கீத் குமார் வீடியோவில் கூறியிருப்பது, அவரது பேச்சு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.