தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பகிர்வு: ஆஜராக டெக் தலைமைகளுக்கு உத்தரவு!

தவறான தகவல்கள், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பகிர்ந்ததற்கான குற்றச்சாட்டில், பெரும் சமூக வலைதள நிறுவனங்களான ஆல்ஃபாபெட், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களை மார்ச் 25ஆம் தேதி ஆஜராக (முன்னிலையாக) அமெரிக்க நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Alphabet and Google CEO Sundar Pichai
Alphabet and Google CEO Sundar Pichai

By

Published : Feb 20, 2021, 10:37 AM IST

சான் பிரான்சிஸ்கோ:மூன்று சமூக வலைதள நிறுவனங்களை நாடாளுமன்றத்தில் மார்ச் 25ஆம் தேதி முன்னிலையாக அதன் புலனாய்வு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களான மார்க் ஸுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, ஜேக் டோர்சே ஆகிய பெரும் தலைமைகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள், உண்மைக்குப் புறம்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்படுவதைத் தடுக்க என்ன வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவ்வாறு அனுப்பப்பட்ட தகவல்கள் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன? போன்ற கேள்விகள் இவர்கள் முன்னிலையில் வைக்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக ஜனவரி மாதத்தில் இது குறித்து விளக்கம் கேட்ட நீதிமன்றம், தற்போது இரண்டாவது முறையாக மார்ச் 25ஆம் தேதி முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details