உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகப்பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்-அப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த மாதம் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு, iOS மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள வாட்ஸ்-அப்பின் சமீபத்திய பதிப்பானது, பயனர்கள் தனித்தனி செய்திகளுக்கு எமோஜியுடன் பதிலளிக்கவும், அதே நேரத்தில் 512 நபர்களை குழுக்களில் சேர்க்கும் வகையில் உள்ளது.