பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய செயலிகளில் முக்கியமான செயலி தான் ‘வாட்ஸ்அப்’. இது பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருக்கும் அனைவரும் தகவல் பரிமாற பொதுவாக பயன்படுத்தப்படும் செயலியாகியுள்ளது. இந்நிலையில், இந்தச் செயலியில் இன்னும் சில அம்சங்கள் இணையவிருப்பதாக அதனின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ETV Bharat / science-and-technology
வாவ்... புதிய அப்டேட்களுடன் வாட்ஸ்-அப்! - மார்க் ஜூக்கர்பெர்க்
'வாட்ஸ்அப்’ செயலியில் மேலும் சில அப்டேட்கள் வந்திருப்பதாக அதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “தனியுரிமை சார்ந்த சில அம்சங்கள் 'வாட்ஸ்அப்'-ல் வந்துள்ளது. வாட்ஸ்அப் குழுவிலிருந்து யாருக்கும் Notification போகாமலேயே Leftஆவது, நாம் ஆன்லைனில் இருப்பதைப் பார்ப்பவர்கள் யார் எனக் கட்டுப்படுத்துவது, ஒரு முறை பார்ப்பதற்காக அனுப்பும் மெசேஜ்களை ஸ்கிரீன் சாட் எடுப்பதைத்தவிர்ப்பது போன்ற அம்சங்கள் புதிய அப்டேட்டில் வந்துள்ளன. நாங்கள் பல வழிமுறைகளை கட்டமைத்து உங்கள் மெசேஜ்கள் மற்றும் உரையாடல்களை ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி வாட்ஸ்அப் குரூப் அட்மின்களே மெசேஜ்களை 'Delete For Everyone' செய்யலாம்!