அமேஸ்ஃபிட் பிப் யு ப்ரோ, ரெட்மி வாட்ச் போன்றவைகளுடன் சந்தையில் நேரடியாக ரூ.4,999-க்கு ரியல்மி வாட்ச் எஸ் போட்டிக்கு இறங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட் வாட்ச்களுடன் ஒப்பிடும்போது, ரியல்மி வாட்ச் எஸ் சிறந்த உலோக கட்டுமானத்தை வழங்குகிறது.
கூடுதலாக, பருமனான வடிவமைப்பை கொண்டிருக்கும் போதிலும், பழக்கமான கடிகார வடிவமைப்பைத் தேடுபவர்களுக்கு இது விருப்பமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ரியல்மி வாட்ச் எஸ் சில்வர் அம்சங்கள்:
- 1.3 அங்குல (360x360 பிக்சல்கள்) வட்ட வடிவிலான தொடுதிரை
- 600 நிட்ஸ் பிக்சர் ப்ரைட்னஸ்
- ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சம்
- 2.5 டி கர்வ்டு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- 16 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- 390 எம்ஏஎச் பேட்டரி
- சிங்கிள் சார்ஜில் 15 நாட்கள் பயன்பாடு
- இரண்டு மணி நேரத்தில் 0 முதல் 100 விழுக்காடு வரை சார்ஜ் செய்ய முடியும்
- லிக்விட் சிலிக்கான் ஸ்ட்ராப்ஸ்
- 100 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள்
- நிகழ்நேர ஹார்ட் ரேட் மானிட்டர்
- பிபிஜி சென்சார்
- ரத்த ஆக்சிஜன் கண்காணிப்பு (SpO2 சென்சார்)
- ஸ்லீப் மானிட்டர்
- ஐபி 68 நீர் எதிர்ப்பு மதிப்பீடு, 1.5 மீட்டர் ஆழம் வரை மட்டுமே நீர் எதிர்ப்பு ஆதரவு தரும்
ஆனால் இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் நீச்சலுக்காக வடிவமைக்கப்படவில்லை.