டெல்லி: ஒன்-ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைக்கடிகாரம் 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat / science-and-technology
அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளிவரும் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்வாட்ச்! - ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்வாட்ச்
ஒன்-ப்ளஸ் ஸ்மார்ட் கைகடிகாரம் அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பீட் லாவ் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கைகடிகாரமானது, ஸ்நாப்டிராகன் வியர் 4100 செயல்திறனுடன், கூகுள் வியர் இயங்குதளத்துடன் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் கைக்கடிகார வரவை பயனர்கள் மிகவும் எதிர்பார்த்திருப்பதாக நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பீட் லாவ் தனது ட்வீட்டில் கூறியிருக்கிறார். தொடர்ந்து மக்கள் எதிர்பார்க்கும் திறன் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை ஒன்-ப்ளஸ் நிறுவனம் வெளியிடும் என்று பயனர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டிலிருந்தே ஒன்-ப்ளஸ் நிறுவனம் ஸ்மார்ட் கைக்கடிகாரத் தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் ஒ-லெட் தொடுதிரை, அனைத்து விதமான சென்சார்கள் என அசாத்திய திறனுடன் ஒன்-ப்ளஸ் ஸ்மார்ட் கைக்கடிகாரம் சந்தைக்கு அறிமுகமாகும் என நம்பலாம்.