ETV Bharat / science-and-technology
உடற்சூட்டை அறியும் தன்மையில் வெளியாகும் GOQii வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலன்! - covid-19 prevention
GOQii நிறுவனம் தனது வைட்டல் 3.0 ஸ்மார்ட் கை அணிகலனை 3,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதில் உடற்சூட்டை அறிந்துகொள்ளும் உணரிகள் இருப்பதால் கரோனா காலங்களில் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
GOQii
டெல்லி: உடற்சூட்டை அறிந்துகொள்ளும் புதிய கை அணிகலனை GOQii நிறுவனம் வைட்டல் 3.0 எனும் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- அமேசான், ப்ளிப்கார்ட் இணைய அங்காடிகளில், இந்த தகவல் சாதனம் 3,999 ரூபாய்க்கு கிடைக்கும்
- திரைவ் (Thryve) எனும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த தகவல் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது
- இதில் உடற்சூட்டைக் கண்டறியும் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளதால், கரோனா காலங்களில் பயனர்கள் தங்கள் உடலை கண்காணிக்க உதவியாக இருக்கும்
- தானியங்கி வழிகாட்டுதல்கள் இதில் பதியப்பட்டுள்ளன.
- நம் உடல்நிலையை கணித்து, அதற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை இத்தகவல் சாதனம் நமக்கு வழங்கும்
- ரத்த ஓட்டம், இதய துடிப்பு ஆகியவற்றையும் இந்த தகவல் சாதனம் கண்காணிக்கும்
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST