உலகளவில் புகழ் பெற்ற ஃபிட்பிட், கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் வகையில் செயற்கை சுவாசக் கருவிகள் உருவாக்கும் முனைப்பில் உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜேம்ஸ் பார்க் தெரிவித்துள்ளார்.
ETV Bharat / science-and-technology
கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை உருவாக்க ஃபிட்பிட் திட்டம்! - features of fitbit ventiletor
கரோனா நோய்க் கிருமிக்கு சிகிச்சையளிக்க, அவசர செயற்கை சுவாசக் கருவிகளை வடிவமைக்க ஃபிட்பிட் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் பார்க் இன்று தெரிவித்தார்.
![கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை உருவாக்க ஃபிட்பிட் திட்டம்! fitbit design ventilators for covid-19](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7247272-395-7247272-1589806427860.jpg)
fitbit design ventilators for covid-19
இது குறித்து பேசிய அவர்,
- சுவாசக் கருவிகள் மூலம் நோயாளிகளுக்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
- இந்த தொழில்நுட்ப செயல்முறைகள் குறித்து உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.
- இதனை சிறிய விலையில் மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
- இதேபோல டெஸ்லா, ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெறும் நிறுவனங்களும் செயற்கை சுவாசக் கருவிகள் வடிவமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றன.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST