டெல்லி: ஜியோனி நிறுவனம், புதிய மூன்று ஸ்மார்ட் வாட்சுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டைல்பிட் ஜி.எஸ்.டபிள்யூ 6, ஸ்டைல்ஃபிட் ஜி.எஸ்.டபிள்யூ 7, ஸ்டைல்பிட் ஜி.எஸ்.டபிள்யூ 8 ஆகிய மூன்று ஸ்மார்ட் வாட்சுகள் இந்திய தொழில்நுட்ப சந்தைக்குள் நுழைந்துள்ளது.
கரோனா தொற்று காலத்தில் மிகவும் பயனுள்ள அம்சமாகப் பார்க்கப்படும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிடும் வசதி, நிகழ்நேர இதய துடிப்பு கண்காணிப்பு, கலோரி மீட்டர், உறக்கத்தின் தர கண்காணிப்பு, அழைப்புகளை ஏற்கும் வசதி என, குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களுடன் ஜியோனி ஸ்டைல்பிட் ஸ்மார்ட் வாட்சுகள் சந்தைக்கு வரவுள்ளன.
ஜியோனி ஸ்டைல்பிட் ஜி எஸ் டபிள்யூ 7 அம்சங்கள்
- 1.3 அங்குல வட்ட தொடுதிரை
- 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு உணரி
- ரத்த ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு
- அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப், பேஸ்புக் அறிவிப்புகள்
- ஜி பட்டி (GBuddy) செயலி உதவியுடன் உடற்பயிற்சியினைக் கண்காணிக்கும் வசதி
- விலை: ரூ.3,999 (சிறப்பு வெளியீட்டு விலை ரூ. 2,099)
ஜியோனி ஸ்டைல்பிட் ஜி எஸ் டபிள்யூ 7
ஜியோனி ஸ்டைல்பிட் ஜி எஸ் டபிள்யூ 6 அம்சங்கள்
- சதுர தொடுதிரை உடன் முனைகளில் வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
- குரல் அழைப்புகளை மேற்கொள்ள மைக்ரோஃபோன், ஸ்பீக்கர்
- 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு உணரி
- ரத்த ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு
- புளூடூத் 5 இணைப்பு
- ஜி பட்டி செயலி உதவியுடன் உடற்பயிற்சியினைக் கண்காணிக்கும் வசதி
- 220 எம்ஏஎச் பேட்டரி / 15 நாட்கள் வரை தாங்கும் அல்லது முழுப் பயன்பாட்டுக்கு ஐந்து நாட்கள் வரை தாங்கும் திறன்
- விலை: ரூ. 6,999
ஜியோனி ஸ்டைல்பிட் ஜி எஸ் டபிள்யூ 8 அம்சங்கள்
- ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் வட்ட வடிவிலான தொடுதிரை
- 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு உணரி
- ரத்த ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு
- புளூடூத் 5 இணைப்பு
- ஜி பட்டி (GBuddy) செயலி உதவியுடன் உடற்பயிற்சியினைக் கண்காணிக்கும் வசதி
- குரல் அழைப்புகளை மேற்கொள்ள மைக்ரோஃபோன், ஸ்பீக்கர்
- 300 எம்ஏஎச் பேட்டரி / 18 நாட்கள் வரை தாங்கும் அல்லது முழு பயன்பாட்டுக்கு 7 நாட்கள் வரை தாங்கும் திறன்
- விலை: ரூ. 8,999