டெல்லி: சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக திகழும், எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் நிறுவனம், தவறாக வழிநடத்தும் மீடியாக்களை, மக்கள் எளிதாக அடையாளம் காணும் பொருட்டு, “நோட்ஸ் ஆன் மீடியா” எனும் புதிய வசதியை, சோதனை செய்து வருவதாக தெரிவித்து உள்ளது.
மீடியாவிற்கான சமூகக் குறிப்புகளை, ட்விட்டர் நிறுவனம் பரிசோதித்து வரும் நிலையில், இது குறிப்பிட்ட வகையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் தொடர்பான மதிப்புமிக்க செயற்கை நுண்ணறிவுகளை வழங்க, அந்த தளத்தின் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மைச் சரிபார்ப்புகளை பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் மீடியாக்களில் அதிகம் காணப்படுகின்றன. பங்களிப்பாளர்களின் கைகளில், சூப்பர் பவரை கொடுக்கவல்ல “நோட்ஸ் ஆன் மீடியா” எனும் புது அம்சத்தை, ட்விட்டர், சோதனை செய்து வருகிறது. "ஒரு படத்துடன் இணைக்கப்பட்டு உள்ள குறிப்புகள், அதன் சமீபத்திய மற்றும் எதிர்கால பொருந்தும் படங்களில் தானாகவே தோன்றும் வகையில் இருக்கும்" என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்விட்டர் பயனர்கள், இனி சில ட்விட் பதிவுகளில், தங்கள் குறிப்புகளுடன் "About the image" எனும் புதிய விருப்பப் பகுதியும் இடம்பெறும். இந்த விருப்பத்தை, நாம் தெரிவு செய்யும்பட்சத்தில், அந்த மீடியா, தன்னை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் என்று, அந்த ட்விட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.