ஒட்டவா:பிரபல பொழுதுபோக்கு வீடியோ செயலிகளில் ஒன்றான ‘டிக்டாக்’ செயலிக்கு கனடா தடை விதித்துள்ளதாக, அந்நாட்டின் முதன்மை தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். டிக்டாக் செயலி ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருப்பதே தடைக்கான காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "இதுதான் முதல் படி மற்றும் இது மட்டுமே ஒரே வழி" என டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுரூட்டோ கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஆணையம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்த மறுநாள் வந்துள்ளது. சீன நிறுவனமான பைட் டான்ஸ் லிமிட்டெட் (ByteDance Ltd) என்ற நிறுவனத்தின் செயலியான டிக்டாக், ஒருவரின் தனிப்பட்ட தரவுகளை சீன அரசுக்கு கொடுப்பதில் துணை போவதாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த நாடுகளின் ஊழியர்களுக்கும் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், 30 நாட்களுக்குள் தங்களது சாதனங்களில் இருந்து இந்த செயலியை நீக்குவதற்கு அரசு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.