தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

விலைகுறைந்த ஹெச்.டி டேப்லெட்டை வெளியிட்டது வால்மார்ட் நிறுவனம்! - வால்மார்ட் ஆன்

பல்பொருள் அங்காடி விற்பனையக ஜாம்பவான் ஆன வால்மார்ட் நிறுவனம் இரண்டு புதிய டேப்லெட் தகவல் சாதனத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெச்.டி திரை போன்று பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 'ஆன்' டேப்லெட் மிகக் குறைந்த விலையில் சந்தைக்கு அறிமுப்படுத்தப்பட்டிருக்கிறது.

walmart onn android tablets
walmart onn android tablets

By

Published : May 20, 2020, 9:05 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சான் பிரான்சிஸ்கோ: அமேசானை அடுத்து வால்மார்ட் நிறுவனமும் தனது 8 மற்றும் 10 அங்குல தொடுதிரை டேப்லெட்டை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இதில் கூகுள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
  • ஹெச்.டி தொடுதிரை, யூஎஸ்பி-சி போர்ட் வசதி கொண்டுள்ளது.
  • 8" ரகத்தைப் பொறுத்தவரையில் ஹெச்.டி, தொடுதிரை, 32 ஜிபி சேமிப்புத் திறன், 2 ஜிபி ரேம், 2.02 Ghz ஆக்டா-கோர் புராசஸர், 5 மெகா பிக்சல் முன்புற, பின்புறப் படக்கருவிகள் கொண்டது.
  • 10.1" ரகத்தைப் பொறுத்தவரையில் முழு அளவு ஹெச்.டி, தொடுதிரை, 32 ஜிபி சேமிப்புத் திறன், 3 ஜிபி ரேம், 2.02Ghz ஆக்டா-கோர் புராசஸர், 5 மெகா பிக்சல் முன்புற, பின்புறப் படக்கருவிகள் கொண்டது.
  • இரண்டு தகவல் சாதனங்களும் 10 மணிநேர மின்கலப் பயன்பாட்டுத் திறனும் கொண்டது.

கரோனா பணியாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள்: மஹிந்திரா அறிவிப்பு!

சில தினங்களுக்கு முன் அமேசான் நிறுவனம், ஃபையர் ஹெச்.டி 8, ஹெச்.டி 8+, ஹெச்.டி 8 கிட்ஸ் ஆகிய ரக டேப்லெட்டை தொடக்க விலையாக 6000 ரூபாயிட்டு, தகவல் சாதன சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதன் வரிசையில் வால்மார்ட்-இன் 'ஆன் டேப்லெட்' இணைந்துள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details